வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கிட்டத்தட்ட 1.63 கோடி மகளிர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.இறுதிக்கட்ட கள ஆய்வு எல்லாம் முடிவு பெற்று  தற்போது பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேருக்கான மனுக்கள் நிராகரிக்கபட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் இறுதிப்பட்டியலை முதலமைச்சர் 11ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பார்வையிடுகிறார்.  அந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், இந்த திட்டத்துடன் சிறப்பு அதிகாரி, சிறப்பு திட்டத்துறை செயலாளர், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

இது தான் மகளிர் உரிமைத் தொகை திட்டதினுடைய இறுதி ஆலோசனை. பல கட்டமாக பலமுறை முதலமைச்சராக ஆலோசனை செய்தும் இந்த ஆலோசனை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.ஏனென்றால் இந்த திட்டம் செப்டம்பர்  15 ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி பட்டியலை பார்க்கிறார் முதல்வர்.

இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கி விட்டார்கள். இந்த ஆண்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி அன்றே அனைத்து மகளிர் உடைய வங்கி கணக்கிலும் குறுஞ்செய்தி மூலமாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் வங்கிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 15 அன்றைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மகளிருக்கு 1000 ரூபாய் பணம் என்பது வரவு வைக்கப்பட இருக்கின்றது.