சென்னை வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.