ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர் என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. மாணவர்கள் உடனான கலந்துரையாடலில் ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையான நிலையில், ஆளுநர் மாளிகை டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் ஆளுநர் அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும். அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசு தலைவர். அதனால் குடியரசுத் தலைவர் தான் ஆளுநரின் தலைவர். இதை அரசியலமைப்பு தெளிவுபடுத்தி உள்ளதாக கூறியுள்ளது.