ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். அதாவது, ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு இப்படி பேசும் ஆளுநர் ஆர்என் ரவி, தூத்துக்குடிக்கு சென்று அங்கு இப்படி பேச முடியுமா? மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அவர் இப்படி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மக்கள் தன்னெழுச்சியாக போராடியதோடு 100 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடியவர்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இங்கு அமர்ந்துகொண்டு பேசும் அவர், தூத்துக்குடியில் போய் பேசினால் தான் அங்கு மக்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பது தெரியும் என உதயநிதி பேசினார்.