இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக், 18 வயது வரை மாணவர்கள் அனைவரும் கணிதம் பயில வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடையே முதல் தடவையாக உரையாற்றினார். அப்போது அவர், நாட்டில் அனைத்து மாணவர்களும் 18 வயது நிரம்பும் வரை கணிதம் பயில வேண்டும் என்பதை உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அனைத்து இடங்களிலும் பணிகளுக்கு தரவுகள் மற்றும் புள்ளி விவரங்கள் முக்கியமாகிவிட்டன. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நம் பிள்ளைகளுக்கு அதிக அளவில் பகுப்பாய்வு திறன் இருக்க வேண்டும். இந்த திறன்கள் இல்லாமல் நம் பிள்ளைகள் வெளியிடங்களுக்கு சென்றால், அது அவர்களை கீழே தள்ளிவிடும் என்று கூறியிருக்கிறார்.