பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் சுயசரிதை புத்தகத்தில், தன் சகோதரர் இளவரசர் வில்லியம் தன் சட்டையை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை வரலாற்றை ஸ்பேர் என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார். வரும் பத்தாம் தேதி அன்று வெளியாகும் அந்த புத்தகம் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனினும் இப்போதே அந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதன்படி, இளவரசர் ஹாரி குறிப்பிட்டிருப்பதாக வெளியான தகவலில், லண்டனில் இருக்கும் இல்லத்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டது. என், மனைவி முரட்டு குணம் கொண்டவர், கரடு முரடானவர் என்று வில்லியம் கூறினார். அதன் பிறகு என் சட்டையை பிடித்து அடித்து கீழே தள்ளினார்.

நாய் சாப்பிடும் தட்டில் போய் விழுந்ததில் என் முதுகில் அடிபட்டது. எங்களின் உறவு மற்றும்  பிரச்சனை குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவிக்க விரும்பினார். என்னை பற்றி அவர் புரிந்து கொள்ளவே இல்லை என்று ஹாரி தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.