ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஐ.எஸ் தீவிரவதாக அமைப்பை குறி வைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டதில் எட்டு நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல்கள் மேற்கொண்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் மறைந்திருப்பதாக தலிபான்களுக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, தலீபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள தீர்மானித்தனர்.

அந்த வகையில், காபூல் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகள் மறைந்திருந்த இடத்தில் தலிபான்கள் அதிரடி தாக்குதல் மேற்கொண்டனர். இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உட்பட ஐஎஸ் தீவிரவாதிகள் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும், தீவிரவாதிகள் ஏழு பேர் கைதாகி இருக்கிறார்கள். இந்த தாக்குதலை தலீபான்கள் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜபிகுல்லா முஜாஹித் உறுதிப்படுத்தியுள்ளார்.