அமேசான் நிறுவனம், தங்கள் பணியாளர்கள் 18000 பேரை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ட்விட்டர், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிரடியாக பணியிலிருந்து நீக்கியது.

இந்நிலையில் புத்தாண்டு தொடக்கத்திலேயே அமேசான் நிறுவனம் புதிதாக அறிவிப்பு ஒன்றை விட்டுள்ளது. தங்கள் பணியாளர்கள் 18,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளியான அந்த அறிவிப்பால் ஊழியர்கள் பீதியடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே அந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.