ஆஸ்திரேலியாவின் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஒரு நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் கிம்பர்லி என்னும் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, அந்நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நதியின் கரையோரத்தில் வசித்திருக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.