கூடுதலாக இன்னும் இரண்டு புயல்கள் கலிபோர்னியாவை பாதிக்க கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை கடந்த சில நாட்களாக பனிபுயல்கள் புரட்டிப் போட்ட நிலையில் தற்போது மழையும் புயலும் வாட்டி வதைத்து வருகின்றது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றால் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் சரிந்துள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2.7 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தகப் பகுதிகளில் மின் இணைப்பு இன்றி பாதிக்கப்பட்ட உள்ளன. இந்த நிலையில் இன்னும் இரண்டு புயல்கள் கூடுதலாக கலிபோர்னியா மற்றும் பசிபிக் மேற்கு பகுதியை பாதிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தும் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.