அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் 57 பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தும் தற்போது வரை பாலியல் வாழ்க்கையை நான் அனுபவிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கைலே கோர்டி என்ற இளைஞர் விந்தணு கொடையாளராக இருக்கிறார். இலவச சேவையாக அவர் இந்த உதவியை அவர் செய்து கொண்டிருக்கிறார். இவர் மூலம், பல பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் இவருக்கு 57 பிள்ளைகள் இருக்கிறது.
இன்னும் 14 குழந்தைகள் பிறக்கவிருக்கிறார்கள். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, குழந்தைளின்றி வேதனைப்படும் குடும்பத்தினருக்கு உதவும் எண்ணத்தோடு இலவசமாக இதனை செய்கிறேன். இந்த சேவையை தவிர தனக்கு வேறு பாலியல் வாழ்க்கை இல்லை என்று கூறியிருக்கிறார்.
இதனை பொழுதுபோக்காக செய்து வரும் அவர், தனது இந்த வித்தியாசமான பொழுதுபோக்கை புரிந்து கொண்டு தன்னை ஏற்கும் பெண்ணை வரவேற்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.