இங்கிலாந்து மன்னரான சார்லஸின் மீது முட்டையை தூக்கி எறிந்த நபருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் தன் மனைவியான ராணி கமிலாவுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்து மக்களை பார்த்து மன்னர் மற்றும் ராணி இருவரும் கையசைத்து சென்றார்கள். அந்த சமயத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர், மன்னர் மீது மூன்று முட்டைகளை தூக்கி எறிந்தார்.
நல்ல வேளையாக அவர் மீது முட்டைப்படவில்லை. தரையில் விழுந்தது. மேலும் அந்த இளைஞர், அடிமைகளால் இந்த நாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மன்னர் கிடையாது என்று கூச்சல் போட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று அந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அந்த இளைஞர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவருக்கு 100 பவுண்டுகள் அபராதமும் வழக்கு செலவிற்கு 85 பவுண்டுகளும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.