ஐபோன் -14 ப்ரோ ட்ரெண்டிங் மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படுகிறது. எனினும் லட்சங்களில் விலை இருப்பதால், அதனை வாங்குவது அனைவராலும் இயலாத ஒன்றாகும். ஐபோன் ப்ரோவைப் போல் நீங்கள் மொபைல் வாங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பின், ஐபோன் 14 ப்ரோ போன்ற வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் வந்திருக்கிறது. இதன் விலையானது யூகிக்க முடியாத அளவுக்கு குறைவாகவே உள்ளது. அந்த ஸ்மார்ட் போனின் பெயர் LeEco S1 Pro ஆகும்.

இது iPhone-14 Pro போன்று உள்ளது. LeEco-ன் இந்த ஸ்மார்ட்போனில் முன் மற்றும் பின் பகுதியில் iPhone 14 Pro ஆகிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் இரண்டையும் பார்த்து அடையாளம் காண்பது மிகவும் கடினம் ஆகும். அதன் 8GB + 128GB மாடலை வாங்க 899 யுவான் அதாவது ரூபாய்.10,897 செலுத்த வேண்டும். இவற்றில் Unisoc T7150 சிப்செட் நிறுவப்பட்டு உள்ளது.  அத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4GB + 64GB, 6GB + 128GB மற்றும் 8GB + 256GB விருப்பங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.