தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது புஷ்பா 2 படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. மிரட்டலாக உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் டீசர் வீடியோவால் தற்போது புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.