மும்பை ரயில் நிலைய மேம்பால நடைபாதையில், பொதுமக்களின் நடமாட்டத்திற்கு மத்தியில் நபர் ஒருவர் அநாகரிகமாகச் சிறுநீர் கழித்துள்ளார். அதை அங்கிருந்தவர் காணொளி எடுத்தபோது, தாம் ஒரு நீரிழிவு (டயாபடிக்) நோயாளி என்று கூறி அந்த நபர் சமாளிக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த காணொளி எடுத்தவர், டயாபடிக் நோயாளியாக இருந்தால் பொது இடத்தை இப்படித்தான் அசிங்கப்படுத்துவதா என்று கூறி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

​மும்பை போன்ற பெருநகர ரயில் நிலையத்தில் நடந்த இந்த விசித்திர விவாதக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. நீரிழிவு நோய் என்ற சாக்குப்போக்கு கூறி தப்பிக்க முயன்ற அந்த நபரின் பொறுப்பற்ற செயலுக்கு எதிராக, நெட்டிசன்கள் இணையத்தில் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.