தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நானி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய்குமார் போன்றோர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தசரா திரைப்படம் 100 கோடி வசூலை எட்டியதாக படக்குழு அண்மையில் அறிவித்தது. இதன் காரணமாக தற்போது வெற்றியை கொண்டாடும் விதமாக தசரா பட குழுவினர் அனைவருக்கும் தயாரிப்பாளர் 10 கிராம் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார். இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலாவுக்கு பிஎம்டபிள்யூ காரை தயாரிப்பாளர் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.