பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், தனக்கு ஏற்பட்டுள்ள கடுமையான உடல்நலப் பாதிப்பு மற்றும் அதற்காக தான் எடுத்துக்கொள்ளும் தீவிர சிகிச்சைகள் குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பேசி ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான தகவலில், “நான் கடந்த 3, 4 ஆண்டுகளாக ‘ஆட்டோ இம்யூன்’ (Autoimmune) என்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காகத் தொடர்ந்து தீவிரமான மருத்துவக் கண்காணிப்பில் இருந்து, மருந்துகளை உட்கொண்டு வருகிறேன்” என்று தனது நோய் பாதிப்பை பகிரங்கமாக உடைத்துள்ளார்.
மேலும், தனது தற்போதைய உடல்நிலை குறித்துப் பேசிய விஷ்ணு விஷால், “நான் எடுத்துக்கொள்ளும் அந்த வீரியமிக்க மருந்துகளின் பக்கவிளைவுகளால்தான் (Side Effects) என் உடலில் எப்போதும் ஒருவிதக் கடுமையான சோர்வு தெரிகிறது. ஆனால், சோர்வு ஏற்பட்டாலும் தற்போதைய சூழலில் நான் மேற்கொண்டிருக்கும் இந்தச் சிகிச்சை என் உடலுக்கு மிகவும் அவசியமானது” என்று மிகத் தைரியமாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் எப்போதும் பிட்டாகவும், சுறுசுறுப்பாகவும் வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 4 ஆண்டுகளாக இப்படி ஒரு கொடிய நோயுடன் போராடி வருகிறார் என்ற உண்மை ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
