2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திறளும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கியுள்ளது. டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தேர்தலுக்கான வேலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி மற்றும் நட்டா தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மீண்டும் மோடியே தேசத்தின் பிரதமராக வழி நடத்துவார் என்று தெரிவித்தார். இதனால் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியே அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெறும் பட்சத்தில் மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.