வடமாநிலங்களில் வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் 19ஆம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறைய தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இமயமலையிலிருந்து வரும் குளிர்ந்த பனிக்காற்று காரணமாகத்தான் இந்த சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு குளிர் காற்று வீசும் திசை மாறும் என்றும் அதன் பின்னர் வெப்பம் அதிகரித்து குளிர் குறைய தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை டெல்லி ,பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குளிர் நிலவும் என தெரிவித்துள்ளது.