பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர பல செலவுகளை செய்வதற்காக ஓடி ஓடி சம்பாதித்து விட்டு தங்களுக்கு வயதாகும்போது நிதி ஆதாரங்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள். அதே நேரத்தில் இப்போது நிறைய பணம் சேர்த்து வைக்கவும் தயாராக இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 40 வயதும் இருக்க வேண்டும். வங்கி கணக்கு ஆதார் அட்டை இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

ஆன்லைனிலும் இணைய கூடிய இத்திட்டத்தில் தினமும் 7 ரூபாய் என்ற கணக்கின்படி மாதம் 210 செலுத்தினால் மாதாந்திர பங்களிப்பை கணக்கிட்டு 60 வயதில் 2000 முதல் 5000 வரை மாத பென்ஷனாக பெற முடியும். இத்திட்டத்தில் சந்தாதாரர் இறந்து விட்டால் அவரது வாழ்க்கை துணைக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இருவருமே இறந்து விட்டால் அவர்கள் குறிப்பிட்ட நாமினிக்கு ஓய்வூதிய கார்ப்பஸ் வழங்கப்படும் நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.