2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக உலக வங்கியின் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3% வளர்ச்சி என்பதை விட குறைவாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு முதலீடு குறைவு ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்ட நெருக்கடி என பல்வேறு காரணங்களால் உலக பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி 2023 மட்டும் 2024 ஆம் ஆண்டுகளில் 1.7 மற்றும் 2.7 குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கால நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் உலக பொருளாதாரத்திற்கு ஏற்படும் இடர்பாடுகளை கலைவதற்கு மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.