செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், துவாரகா வந்ததுக்கு பிறகு இந்த உலகம் பலவிதமான ஆய்வுகளையும்,  அறுவை சிகிச்சைகளையும் செய்யும். நீங்க ஒரு பொய்யை சொல்லிட்டு பொய்யை நீண்ட நாள் நீடிக்க வைக்க முடியாது. எல்லாருக்கும் இருக்கிற எதிர்பார்ப்பு.  முகம் பார்த்து இதுதான் என உறுதிப்படுத்துகிற எல்லாரையும் போல தான் நானும் இருக்கேன்.  ஆனால் நான் கேட்டதும்,  பேசினதும் எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

தந்தை செல்வா அவர்கள் 35 ஆண்டு காலம் அறவழி போராட்டத்தை செய்திருக்கின்றார். அந்த 35 ஆண்டு காலம் பொய்த்துப் போன நிலையில் தான்,  தந்தை செல்வா அவர்களை…..   பிரேமதாஸ் தொடக்கி இலங்கையை ஆண்ட அத்தனை பேரும் ஏமாந்த நிலையில் தான்,  தந்தை செல்வா அவர்கள் சொல்றாரு….  பட்டுக்கோட்டை தீர்மானத்துல சொல்றாரு….  நாங்கள் போராடிவிட்டோம்…

எங்களை ஏமாற்றி விட்டார்கள்…. இனி கடவுள் தான் வந்து காப்பாற்ற வேண்டும்… அப்படின்னு சொல்றாரு…. அப்போ தலைவர் பிரபாகரன் அவர்கள்,  ஆயுதம் எடுக்காத காலம்…..   அவரைப்பற்றி பிரகடனப்படுத்தாத காலத்தில் சொல்றாரு….  கடவுள் வந்து தான் இனி தமிழீழ மண்ணையும்,  தமிழீழ  மக்களை  காப்பாற்றும்.  என்னை மாதிரியே என்னுடைய இளைஞர்களும், அடுத்த தலைமுறையும்,  அகிம்சை வழியில் போராடனும் என்று நினைக்காதீங்க…..

ஒரு நாள் இல்ல,  ஒரு நாள் என்னுடைய தலைமுறை ஆயுதத்தை கையில் எடுக்கும் என்று  சொன்னார். அப்போ தலைவர் பிரபாகரன் வெளி உலகத்திற்கு தெரியாத நேரம். அதற்கு பிறகு காலம் அவர் சொன்ன கடவுளாக…. தமிழீழ  மண்ணையும்,  இனத்தையும் காக்கிற கடவுளாக தலைவர் பிரபாகரன் அவர்கள் தலை எடுத்து,  33 ஆண்டுகள் இந்த உலகம் வியக்க வியக்க அறமான ஆட்சியை  நடத்துறாரு என பேசினார்.