திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், அண்ணா அவர்கள்…. கலைஞர் அவர்கள்… பேராசிரியர் அவர்கள்… நாவலர்  போன்றவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்து…. எப்படி  தலைவராக பொறுப்புக்கு வந்தார்களோ,  அந்த இளைஞர்களாக இருந்தவர்கள்  பொறுப்புக்கு வந்த காரணத்தினால் தான்….  இளைஞர்கள் தான் கட்சிக்கு தேவை என்பது உணர்ந்த காரணத்தினால் தான்….  இளைஞரணியை உருவாக்கினார்கள்.

அந்த இளைஞர் அணி இன்று உருவாக்கி எந்த அளவிற்கு கம்பீரமாக வளர்ந்து  கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கண் கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்… நான் பல நிகழ்ச்சியை சொல்லி இருக்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எத்தனையோ அணிகள் இருந்தாலும்….  இதை சொல்லுகின்ற காரணத்தினால்,  மற்ற அணிகளை சார்ந்தவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்….

எல்லா அணிகளையும் விட ஒரு சிறந்த அணி இருக்கிறது என்றால்,  அது இளைஞர் அணி என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். அது எதார்த்த நிலை என புரிந்து கொண்டதன்  காரணமாக யாரும் தவறாக நினைக்க வாய்ப்பு கிடையாது. அந்த இளைஞர் அணி இன்றைக்கு கம்பீரமாக தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.விரைவில் சேலத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது.

அந்த மாநாட்டிற்காக மாவட்ட வாரியாக கூட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்…. செயல்வீரர் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்…. மாவட்ட கழக நிர்வாகிகளோடு,  கழக முன்னோடிகளோடு ஆலோசனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்….  மோட்டார் சைக்கிள் பேரணியை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி…. ஒரு  எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எப்படி அன்றைக்கு இளைஞர் அணி தேவை…. இளைஞர் அணி பெருமைப்படுத்தனும் ….. ஊக்கப்படுத்தனும்…. உற்சாகப்படுத்தனும் என்று பேராசிரியர்,  தலைவர் விரும்பினார்களோ அதே போல் இன்றைக்கு நானும்,  நம்முடைய பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களும்,  டி.ஆர் பாலு அவர்கள் எல்லோரும் இளைஞர் அணி வளர வேண்டும் என்று நாங்களும் விரும்பி கொண்டிருக்கிறோம்….

அந்த விருப்பத்திற்கு ஏற்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த அணி  இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்திலே நம்முடைய திருமங்கலம் கோபால் இல்லத்தில் நடைபெறும்  மண விழா நிகழ்ச்சியில் கேட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.