தமிழ் சினிமாவில் அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாலா. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த பாலாவுக்கு மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மலையாள சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் பாலா தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் பாலா பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார்.

இந்நிலையில் நடிகர் பாலா கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. பாலாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவர்கள்  பாலாவை ஐசியூவில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் பாலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் சிறுத்தை சிவா அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதேப்போன்று நடிகர்கள் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் பாதுஷா விஷ்ணு மோகன், ஸ்வராஜ், விபின் போன்றோர் பாலாவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். மேலும் நடிகர் பாலா விரைவில் குணமடைந்து வர வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.