தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம்சரண் தற்போது தன்னுடைய 15-வது திரைப்படத்தில் நடித்து‌ வருகிறார். இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் நிலையில் படத்திற்கு ஆர்சி 15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக க்யாரா அத்வானி நடிக்கும் நிலையில், அஞ்சலி மற்றும் எஸ்.ஜே சூர்யா போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், தமன் இசையமைக்க கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இந்நிலையில் ஆர்சி 15 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு CEO chief electoral officer என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு மார்ச் 27-ம் தேதி நடிகர் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது ‌