தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் சேர்ந்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வில்லன் நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு தற்போது ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது பல வருடங்களுக்கு முன்பாக ஞானவேல் ராஜாவிடம் படம் பண்ணி தருவதாக கூறி எஸ்.ஜே சூர்யா அட்வான்ஸ் வாங்கியுள்ள நிலையில் அந்த படம் பண்ண முடியாமல் போனது. ஆனால் அப்போதே எஸ்.ஜே சூர்யா அட்வான்ஸ் பணத்தை ஞானவேல் ராஜாவுக்கு திருப்பிக் கொடுத்த நிலையில் அவர் பணத்தை வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது ஞானவேல் ராஜா தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என எஸ்ஜே சூர்யாவுடன் கூறியுள்ளாராம்.
ஆனால் எஸ்.ஜே சூர்யா கேட்கும் சம்பளத்தை ஞானவேல் கொடுக்க மறுக்கிறார். அதோடு எஸ்.ஜே சூர்யா கொடுக்கும் அட்வான்ஸ் பணத்தை வாங்க மறுப்பதோடு அதற்கு வட்டியுடன் வேண்டும் என ஞானவேல் ராஜா கேட்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனையால் தற்போது எஸ்.ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.