தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நதியா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த நதியா தற்போது தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேதங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நதியா தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை நதியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 56 வயதிலும் நதியா இப்படி வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறாரே என்று வியந்துள்ளனர்.
View this post on Instagram