தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மாரிமுத்து. படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் மாரிமுத்து அண்மைக்காலமாகவே கொடுக்கும் சில பேட்டிகள் சர்ச்சையாக மாறிவரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ஒரு பெண் திருமணத்தில் நடனம் ஆடுவதை குணசேகரன் கடுமையாக விமர்சித்து இருந்ததோடு பெண் என்றால் தலை குனிந்து ஆணுக்கு இரண்டு அடி இடைவெளி விட்டு பின்னால் நடந்து வரவேண்டும் என கூறி இருந்தார். இதுகுறித்து அவரிடம் பேட்டியில் கேட்கப்பட்ட நிலையில் குணசேகரன் மட்டும் இல்லை நானும் அப்படித்தான் சொல்வேன். திருமணத்தின் பொது பல்வேறு விதமான கோட்பாடுகள் இருக்கும் போது மணமகள் என்பவள் தலைகுனிந்து ஆணுக்கு இரண்டு அடி இடைவெளி விட்டு பின்னால் நடந்து வந்தால் தான் அழகு என்று கூறியுள்ளார். மேலும் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக மாறி உள்ள நிலையில் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.