தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் வேறு பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பொங்கல் என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைப் போலவே தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், நார்வே, சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, மியான்மர், இந்தோனேசியா, மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் மகா சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் அறுவடை திருநாள் இதுவாகும். அது மட்டுமல்லாமல் ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் லோஹ்ரி என்ற பெயரிலும் கோதுமை அறுவடை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அசாம் மாநிலத்தில் மாஹ் பிகுஎன்ற பெயரில் நெல் அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது .

ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் பழங்குடியினத்தவர்கள் தங்கள் அறுவடை மகிழ்ச்சியை கொண்டாட ஒரு வாரம் இந்த பண்டிகையை கொண்டாடி கோவில்களில் வழிபாடு செய்வார்கள். இதனைப் போலவே ஒவ்வொரு மாநிலம் மற்றும் நாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் பெயர்கள் வேறு பெயரில் அழைக்கப்பட்டாலும் விழாவின் முக்கிய நாயகன் ஆதவன் தான் என்பதை உணரலாம்.