நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் தான் ஆரம்பிக்கிறாகள். இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த மாதத்தில் தான் சூரியன் வட அரைகோளப் பகுதியில் தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல் கூட தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. அப்படி சிறப்பு மிகுந்த மாதம் இம்மாதம். இந்த மாதத்தில் மக்கள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு விழாக்களை கொண்டாடுகிறார்கள்.

அதுமட்டுமின்றி பல்வேறு வழிபாட்டு முறைகளையும் இந்த மாதத்தில் தான் பின்பற்றுகிறார்கள். தங்களுடைய முன்னோர்களையும் இந்த மாதத்தில் தான் வழிபடுகிறார்கள். இந்த மாதத்தில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் தைப்பூசம், தை அமாவாசை, ரதசப்தமி போன்ற விழாக்களையும், வீரபத்திரர் வழிபாடு, சாவித்திரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இந்த மாதத்தில் பின்பற்றுகிறார்கள்.

இந்த தைப்பொங்கல் நாளில் அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரசி, சர்க்கரை மற்றும் வெண் பொங்கல், கரும்பு செங்கரும்பு, புது மஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழ வகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படைத்து, பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கிறார்கள். இந்த நாளை நாமும் சிறப்பாக கொண்ட்டாடி மகிழ்வோம்