தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் இறுதியில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாடப்படுவதற்கு முன்பாக பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப போகி பண்டிகையானது மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த போகி பண்டிகையின் போது பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பார்கள்.

இந்த பழைய பொருட்களோடு சேர்த்து மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களும் அழியும் என்பது ஐதீகம். இந்நிலையில் போகி பண்டிகை என்பது பழைய பொருட்களையும் பயனற்றவையையும் தூக்கி எறியும் நாளாக கருதப்படுகிறது. மேலும் இவையே போகி பண்டிகையின் முக்கிய சிறப்புகளாக கருதப்படுகிறது.