இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார்ல நடக்குது. அவர் என்ன என்கிறார்…. ஏம்பா ராகுல்லு உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பான்னு சொல்றாரு. நீங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க…  லாலு அவர் வந்து மிசாவை எதிர்த்து போராடினார். மிசால லல்லு பிரசாத் யாதவ்-வை கைது பண்ணிட்டாங்க.

லல்லு பிரசாத் யாதவை மிசாவில் கைது பண்ண உடனே அவருக்கு பிறந்த பொண்ணு பேரு ”மிஸ்ஸா” இவங்களும் மிசா…  ஆனால் இவங்க மிஸ் பண்ணுன மிஸ்சா புரியுதா ? இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு பக்ருதீன் அலி அகமது. இந்திரா காந்தி ஆட்சியில் மிசா காலத்துல இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.

இந்த பழைய திமுக காரன் எல்லாம் அன்னைக்கு நல்லா தெரியும்…   கரை வெட்டிய கழட்டி வச்சிட்டு எல்லாம் சத்தமில்லாமல் இருந்தான். இப்ப வந்து நான் மிசா-வை பார்த்தேன்,  நான் இந்திரா காந்தியை பார்த்தேன், நான்  நேருவை பார்த்தேன் என சொல்லுறாங்க. நீ யாரை வேணா பாக்கலாம். நரேந்திர மோடி முன்னால நீ ஒன்னும் இல்ல. என்ன நீ..  யார் நீ ? உடனே ஜெயலலிதா அம்மா கேக்குது மோடியா ? லேடியான்னு..

உடனே இவரு…  மோடியா ? லேடியா ? எங்க டாடியா ? என்கிறார். உன் டாடி எல்லாம் பார்த்தவங்க தான்.  உங்க டாடியே எங்க கூட இருந்தவர் தான். அவர் அங்கிருந்து வந்தார் நரேந்திர மோடி.  கருணாநிதி ஐயாவுக்கு உடம்பு சரியில்லை,  பாக்குறதுக்கு வந்தாரு.  இவரு வெளிநாடு போயிருந்தார்.   நம்ம ஸ்டாலின் குடும்பத்தோடு வெளிநாடு போயிருந்தார். நரேந்திர மோடி கருணாநிதி உடம்பு சரியில்லைன்னு பாக்குறதுக்கு வந்தாரு… எவ்வளவு மரியாதை கொடுத்து வைத்திருந்தார் பாருங்கள் திமுக காரனுக்கு மோடி…

உடம்பு சரியில்லைன்னு பார்க்க வராங்க. வந்தவுடனே நான் அவ்வளவு பெரிய வீடு, பிரதமர் இல்லம் அங்க  இருக்கு. நான் அங்க தனியா இருக்கிறேன்.  வயசான காலத்துல நீங்க ஏன் இங்க இருக்கீங்க ? வாங்க..  நான் உங்களை பிரதமர் இல்லத்தில் வைத்து நான் பாதுகாக்கிறேன் என்று மோடி சொன்னார். பாருங்க எவ்வளவு பெரிய அரசியல் நாகரீகம்.

அரசியல் நாகரிகம் என்றால் ? கிலோ என்ன விலை என்று கேட்பான் திமுககாரன். உங்கள்  கருணாநிதி செத்து போனதுக்கு.. எத்தனை இடத்துல…  எல்லா மாநிலத்திலும் தேசிய கொடிய அறை கம்பத்துல பறக்கவிட்டு,  எவ்வளவு பெரிய மரியாதை கொடுத்து,  இரங்கல் கூட்டத்தில் பேசுறதுக்கு அங்கிருந்து நம்முடைய நிதின் கட்காரி போன்றவர்களை  எல்லாம் அனுப்பி வைத்தார். எவ்வளவு மரியாதை கொடுத்தார் என தெரிவித்தார்.