கடலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிகிராமம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் இருக்கும் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? யாராவது கொலை செய்து உடலை ஆற்றின் கரையோரம் வீசி சென்றார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.