கடலூர் மாவட்டத்தில் உள்ள பெ.பொன்னேரியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை திரிசங்கு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் மீது ஏறிய ஏறுவதற்காக டிராக்டரை திரிசங்கு திருப்பியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திரிசங்கு காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டிராக்டர் மற்றும் கரும்புகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.