சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி வசந்தம் நகரில் இன்ஜினியரான நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கந்தன்சாவடி அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி என்ற மனைவியும், 9 மாத கைக்கு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நரேந்திரன் சொந்த ஊரான அரக்கோணத்திற்கு காரில் சென்று தனது தாய், தந்தையை பார்த்துவிட்டு மீண்டும் ஆவடிக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் இரவு 8 மணிக்கு ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நரேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நரேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.