செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  2012ஆம் ஆண்டும் வழக்கை திரும்பப் பெற்றிருந்தார்கள். இப்பொழுது இந்த வழக்கையும் திரும்பப் பெற்றுள்ளார்கள்.  எனக்கு முதல் சம்மனில் 9ஆம் தேதி வர சொல்லி இருந்தார்கள். அப்போது என்னால் வர முடியவில்லை. திரும்ப ஒரு சம்மன் வரும் போது நான் 18ஆம் தேதி வருகின்றேன் என சொல்லிட்டேன்.

எனக்கு விநாயகர் சதுர்த்தி ஒன்னும் இல்லை…  நான் வாரேன்னு சொல்லிட்டேன். அதனால நாம வரணும் இல்லன்னா…  நாளைக்கு எனக்கு சம்மன்  அனுப்பினோம், அவரு சட்டத்துக்கு ஒத்துழைக்கல என்ற  குற்றச்சாட்டு வரக்கூடாதுன்னு வந்தேன். அதனால இன்னைக்கு நீங்க வந்தே ஆகணும்னு அவுங்க சொல்லல. நானா தான் வந்து விளக்கம் கேட்கணும்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்துட்டு போறேன்.

திமுக தூண்டுதல் இல்லாம இது எப்படி ? 2011-இல் இந்த வழக்கு கொடுக்கப்படுது. கொடுக்கப்பட்டதே திமுக – காங்கிரஸின் தூண்டுதலின் பெயரில் தான்…  அன்னைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதுல உண்மை தன்மை என்ன என்று கேட்கிறார்கள் ?

இதையே வேலையா வச்சிக்கிட்டு வழக்கமா எல்லாரு மேலயும் இப்படி புகார் செய்யறாங்கன்னு தெரிஞ்ச உடனே… அதுல உண்மை தன்மை இல்லனு சொன்ன உடனே  தூக்கி தூர போட்டு போயிட்டாங்க. அதுக்கு பின்னாடி வந்த ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் நிறைய புகார் கொடுத்தாங்க. அவங்களுக்கு தெரியும், எடுக்கல…  இவங்களுக்கு என்னைய சமாளிக்க முடியல. என்ன பண்றது ? இத வச்சாவது எதாவது பண்ண முடியுமான்னு பாக்குறாங்க ? என தெரிவித்தார்.