மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மலேசியாவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டா பதிவர் உஷா என்பவர் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “மலேசியாவில் இருந்தவரை எங்கள் வீட்டுப் பிள்ளை போல விஜய்யை நாங்கள் மிக நன்றாகப் பார்த்துக்கொண்டோம்; இப்போது அவர் உங்கள் இடத்திற்கு வந்துவிட்டார், இனி அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View this post on Instagram
“விஜய் எங்களின் தங்கம், அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என உஷா அந்த வீடியோவில் கண்கலங்கியபடி பேசியிருப்பது தளபதி ரசிகர்களைப் நெகிழச் செய்துள்ளது.
மலேசியாவில் விஜய்க்கு அளிக்கப்பட்ட அன்பையும் பாதுகாப்பையும் குறிப்பிட்ட அவர், சென்னையில் நடந்த இந்தச் சம்பவத்திற்காகத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ இப்போது விஜய்யின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதோடு, “எல்லை தாண்டிய பாசம்” எனப் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
