வெளிநாடுகளில் நீர்நிலைகளுக்கு மேலே வீடுகளைக் கட்டி வசிப்பது வழக்கம். அப்படி ஒரு வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், வீட்டின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாகத் தூண்டிலைப் போட்டு மீன் பிடிக்க முயன்றுள்ளார்.
மீன் சிக்கப் போகிறது என்று அவர் ஆவலுடன் காத்திருக்க, தண்ணீருக்கு அடியில் இருந்து ஒரு ராட்சத முதலை திடீரெனத் தனது தலையை வெளியே நீட்டியது.
View this post on Instagram
மீன் தூண்டிலில் சிக்கியது மீன் அல்ல, ஒரு மிகப்பெரிய முதலை என்பதை அறிந்ததும் அந்த நபர் பயத்தில் அலறியடித்துக் கொண்டு பின்னால் குதித்து ஓடினார்.
தூண்டிலில் சிக்கிய ஆத்திரத்தில் அந்த முதலை, அந்த நபரைத் தாக்குவதற்காகத் தரைப்பகுதி வழியாக வீட்டிற்குள் நுழையப் பார்த்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் தூரமாகச் சென்றதால், முதலையால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
சிறிது நேரம் போராடிய அந்த முதலை, மீண்டும் தண்ணீருக்குள்ளேயே சென்றது. @clownlooping என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து மிரண்டு போயுள்ளனர். “மீனுக்குப் பதில் அந்த நபரே முதலைக்கு உணவாகி இருப்பார்” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
