சமீபகாலமாக இந்தியாவில் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களில் பயணிகள் சந்திக்கும் குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், முகமது அர்பாஸ் கான் என்ற இந்திய டிராவல் வ்லாகர் அமெரிக்காவில் பயணம் செய்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில், விமானத்தின் உள்ளே இருந்த ஒரு சிறிய குறைபாட்டை அவர் வீடியோ எடுத்துப் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, அந்த அமெரிக்க விமான நிறுவனம் அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மின்னல் வேகத்தில் செய்து கொடுத்து அசத்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த இந்திய நெட்டிசன்கள், “அமெரிக்கா எப்போதுமே கிரேட் தான்” என்று பாராட்டுவதோடு, இந்திய விமான நிறுவனமான இண்டிகோவை டேக் (Tag) செய்து கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mohd Arbaz Khan (@arbaazvlogs)

“இங்கே ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டாலும் யாரும் கண்டு கொள்வதில்லை; ஆனால் அங்கே ஒரு வ்லாகர் சொன்னதற்கே இவ்வளவு மரியாதை கிடைக்கிறது” என ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய விமான நிறுவனங்கள் தங்களது சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு பாடம் எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.