2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் முதல் காலாண்டில் 7.4 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.2 சதவீத வளர்ச்சியைக் கண்டு உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகத் திகழ்கிறது.

தற்போது அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியை விஞ்சி இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும் என இந்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப்  போன்ற சர்வதேச அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சியைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 6.5 சதவீதம் வரை இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது, இது நாட்டின் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.