பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, கபில் சிபில் பத்தி எல்லாம் நாம ஒன்னும் கவலைப்பட வேண்டாம். அவரு காங்கிரஸ்காரரா ? இல்லையா ? என்றே நமக்கு தெரியாது. ஆனால் அவர் எப்படிப்பட்ட நபர் என்று சொல்லிடனும் உங்களுக்கு….  ஏன்னென்றால்  தமிழ்நாட்டு ஊடகங்கள் அப்பதான் கொஞ்சம் கவனமா எழுதுவாங்க.

இந்த ஊரு முன்னாள் மந்திரி சிதம்பரம்.  சிதம்பரத்தோட கேஸ்ல ஆஜரானது கபில் சிபில். கபில் சிபில் அப்போது என்ன பேசினார் என்று  நான் அதை என்னோட ட்விட்டர் பக்கத்துலையே போட்டு இருக்கேன். கொஞ்சம் kindly follow me in Twitter and Facebook . அரசியல்ல நீங்க அறிவாலயமாக கூட இருக்கலாம், அது  தப்பு கிடையாது அது அவரவர்  உரிமை. அதுல சொல்றாரு… அமலாக்கத்துறை சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதில் எனக்கு

ஆட்சேபனை இல்லை, அப்ப செந்தில் பாலாஜிக்கு என்னடா ஆட்சேபனை வந்ததுஅப்ப சட்ட வல்லுனர்கள் வழக்கறிஞர்கள் நாக்கு இப்படியும் பேசும்,  அப்படியும் பேசுமோ….  சிதம்பரம் உன் கட்சி. ஆனால் உங்க கட்சியினுடைய சீனியர் மினிஸ்டர்,  அவரை கஸ்டடியில் அமலாக்கத்துறை எடுக்கும் போது ஆட்சேபனை இல்லை. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுக்கலாம் என சொன்னார் என தெரிவித்தார்.