திருச்சியில் நடைபெற்ற  திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர், திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் தான் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்தோம். திருச்சியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாடி வீடு என்று பேரறிஞர் அண்ணாவும்,  கழகத்தின் கோட்டை என்று தமிழின தலைவர் கலைஞர் அவர்களும் சொல்வார்கள்.

கழகத்தின் கோட்டை மட்டுமல்ல,  கழகத்தின் தீரர்கள் கூட்டம் தான் இந்த திருச்சி. 1971 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய கொள்கையை முழக்கங்களான அண்ணா வழியில் அயராது உழைப்போம்,  ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்,  வன்முறையை தவிர்த்து- வறுமையை வெல்வோம்,

ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்,  மாநில சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்ற ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு உருவாக்கி தந்தார்கள்.எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது அந்த அளவுக்கு நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.