
திமுக மாநாட்டில் பேசிய TKS இளங்கோவன், திராவிட இயக்க மூத்த முன்னோடிகள்…. 80 ஆண்டு காலம் தமிழ் சமுதாயத்திற்காக எழுதிய… பேசிய… சிந்தித்து… களம் கண்ட போராடிய இதழ்களும், உதடுகளும் இணைந்து நடத்திய புரட்சிக்கு சொந்தக்காரர் ஐயா கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டை வழி நடத்துவதற்கு முன்பு….. பெயரிலே உறவைக் கொண்டு வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டை வழி நடத்துவதற்கு முன்பு…. ஊன்றி வரும் தடி சற்று நடுங்கினாலும், தாடி சற்று அசைந்தாலும், உள்ளத்தின் உரத்தினிலே எந்த அசைவும் இல்லாமல்,
80 ஆண்டு காலம் திராவிட இயக்க சமுதாயத்தை தூக்கிப்பிடித்த, அறிவாசன் தந்தை பெரியார் தமிழ்நாட்டை வழி நடத்துவதற்கு முன்பு… திராவிட இயக்க முன்னோடிகளை பட்டியலிடுவது என்னுடைய நோக்கம்… இனமான பேராசிரியர் அய்யா சொல்லுகிறார்… திராவிட சமுதாயம் எப்படி இருந்தது தெரியுமா ? இனமான பேராசிரிய சொல்கிறார், உலகோர் மதித்திடும் உயர்நிலை வாழ்வு.
அதுதான் திராவிட இன மக்கள்…. வேட்றோர் எவர் வரினும், வந்து தங்கி வாழ்வு பெறினும்…… அவரையும் எம் போல்வர் என்று நினைக்க கூடிய உயர்ந்த சிந்தனைக்கு சொந்தக்காரர் இனமான பேராசிரியர் சொல்லுகிறார்… இந்த சமுதாயத்தில் தான் திட்டமிட்டு நச்சு விதைகள் விதைக்கப்பட்டது. திராவிட சமுதாயத்தின் உடைய தன்னம்பிக்கை நம்பிக்கை தகர்ந்து போனது, தாழ்வு மனப்பான்மை தலைதூக்கியது. உள்ளம் அடிமைப்பட்டது, இன உணர்வு பெறுகின்ற வழி இருக்கிறதே அந்த வழி முற்றிலும் அடைக்கப்பட்டது என பேசினார்.