த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் “பஹீரா”. இப்படத்தின் முதலாவது டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கணேசன் சேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது இப்படத்தின் 2வது டிரைலர் வெளியாகியுள்ளது. பஹீரா படம் வரும் மார்ச்-3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.