சமீபத்தில் சிம்புவின் கல்யாணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வருகின்றது. விரைவில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் சிம்பு கேங்ஸ்டர்-ஆக நடித்துள்ளாராம். மார்ச் 30ஆம் தேதி ரிலீசுக்கு வரும் என சொல்லப்படும் இத்திரைப்படம் கன்னட திரைப்படத்தின் ரீமேக் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 40 வயதாகும் சிம்புவிற்கு அவரின் பெற்றோர்கள் பெண் தேடி வருகிறார்கள். அவ்வப்போது திருமணம் குறித்த வதந்திகளும் வருகின்றன.

தற்போது என்னவென்றால் இலங்கையில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளை சிம்பு திருமணம் செய்யப் போவதாகவும் அவரது பெற்றவர்கள் தேர்வு செய்து முடிவு எடுத்து விட்டார்கள் என செய்திகள் வந்துள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக சிம்பு தரப்பிலிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.