டிஜிட்டல் பேமென்ட் தளமான Phone pe , UPI Lite அம்சத்துடன் அதன் பயன்பாட்டில் நேரலையில் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக யுபிஐ லைட் கணக்கிலிருந்து பின்னை உள்ளிடாமல் இருநூறு ரூபாய்க்குள் குறைந்த மதிப்புள்ள கட்டணங்களை விரைவாக தொடங்க அனுமதிக்கின்றது. இந்த புதிய வசதியில் அனைத்து முக்கிய வங்கிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து யூபியை வணிகர்கள் மற்றும் qr கோடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

போன் பே பயன்பாட்டில் கேஒய்சி அங்கீகாரம் இல்லாத எளிய செயல்முறையின் மூலம் அம்சத்தை செயல்படுத்தலாம் மற்றும் யுபிஐ லைட் கணக்கை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போன் பே-ஐ திறந்த பிறகு முகப்பு திரையில் உள்ள யுபிஐ கிளிக் செய்யவும். அதில் வானத்தில் 2000 ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். நீங்கள் டெபாசிட் செய்ய விரும்பும் தொகையை உள்ளிட்டு டெபாசிட் செய்து கொள்ளவும். Lite- ஐ பயன்படுத்த யு பி ஐ பின்னை உள்ளிடவும். அதன் பிறகு க்யூ ஆர் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.