உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு இணையாக whatsapp நிறுவனம் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் poll என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஓட்டினை தெரிவிக்கலாம். முதன்முதலில் வோட் செய்யும் வசதி இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வாட்ஸ் அப்பிலும் தொடங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் நிறுவனம் மற்றொரு அப்டேட்டையும் வழங்கியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் ஏதாவது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமெண்ட்ஸ் அனுப்பும்போது அதில் ஏதேனும் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றால் Caption ஆக சேர்த்துக் கொள்ளும்படியான அப்டேட் தற்போது வழங்கப்பட்டுள்ளது.