காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் 51 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வாரம் சேதமடைந்த முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்கிறது. இதில் 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட சங்குசாபேட்டை பகுதியில் போடப்பட்ட பேட்ச் ஒர்க் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது.

இதனால் வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பின்னர் முன்பை விட சாலை மிக மோசமாக மாறி விட்டது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சரி செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.