ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், ஷாருக்கான் 58 ரன்களும், டேவிட் மில்லர் 26 ரன்களும் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் டூ பிளசிஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக வில் ஜாக்ஸ் களமிறங்கினார். இவர் 41 பந்தில் 10 சிக்ஸர், 5 பவுண்ட்ரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் பெங்களூர் அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தன்னுடைய 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.