
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பஞ்சாப்ல காங்கிரஸ் கெஜ்ரிவாலை எதிர்க்குமா ? ஆதரிக்குமா ? டெல்லியில் கெஜ்ரிவால ஆதரிக்குமா ? எதிர்க்குமா ? அப்போ கெஜ்ரிவாலை தோற்கடிக்க நீங்க போராடுவீங்க…. அது பிஜேபிக்கு லாபமா ? நஷ்டமா? அப்படித்தானே நீங்க பாக்கணும்…. அதை எப்படி சொல்றது ? பொருந்தாத ஒரு கூட்டணி வச்சுக்கிட்டு, நாமளும் இந்தியா, இந்தியன்னு பேசிட்டு இருந்தா எப்படி ?
மக்கள் ஒரு புரட்சிக்கு தயாராகனும். புரட்சி ஒன்றால தான் இந்த ஆட்சியில்… இந்த அமைப்பு முறை மாற்றி போட முடியும்…. லெனின் சொல்லுறது போல இதுவரை வாழ்ந்தது போல், இனி எப்போதும் வாழ முடியாது என்கிற நிலை உருவாகும் போகுது மக்கள் அவர்களே புரட்சி செய்வார்கள் என்கிறார்கள்.
இது இலங்கையில் நடந்தது. நீங்க எல்லாரும் பார்த்தீங்க… ராஜபக்சே வீட்ல நிறைய கார்கள் நிறுத்தி இருந்தது. அந்த கார்களை எடுத்துட்டு அவன் போகல…. தீ வைத்து கொளுத்திட்டு போய்ட்டான். ஏன்னா அவனுக்கு வேண்டியது கார் இல்லை, சோறு… அந்த நிலைமை இங்க வரும்போது யாரும் எதிர் நிக்க முடியாது என தெரிவித்தார்.